சென்னை: பினா நகரிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 13-ம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகப் பங்கேற்கலாம்.

ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியல், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள், டாக்டர்கள், நர்ஸ், விளையாட்டுப் பயிற்சியாளர், யோகா மாஸ்டர், கல்வி ஆலோசகர், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர், பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப்பணியிடங்களுக்கு மார்ச் 13-ம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
மத்தியப் பிரதேச மாநிலம் கஜபதியிலுள்ள பினா நகரில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.kvbina.org என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

