சென்னை: கர்நாடக மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) முடிவுகள் தற்போது வெளியிடப்படடுள்ளன.
இந்த முடிவுகள் கர்நாடக மாநில தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.kartet.caconline.in என்ற தளத்தில் காணலாம்.

ஆசிரியர் பணியில் சேர உதவும் இந்தத் தேர்வுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடத்தப்பட்டன.
தேர்வு முடிவுகளையும், தேர்ச்சி பெற்றவர்களையும் இந்த இணையதள முகவரியில் காணலாம்.
தேர்வு எழுதியவர்களில் 20 சதவீதம் பேர் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
டெட் முதல் தாளை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு பாடம் நடத்தத் தகுதி பெறுவர். அதேபோல டெட் 2-ம் தாளை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
தேர்வு முடிவுகள் வெளியாகி 7 வருடம் வரை இந்த முடிவுகளுக்கு மதிப்பு உண்டு.
முடிவுகளைக் காண www.kartet.caconline.in இங்கு கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications

