நீங்கள் மரைன் என்ஜினீயரா...? உங்களுக்கு கண்ட்லா துறைமுகத்தில் வேலை...!

Posted By:

சென்னை: கண்ட்லா துறைமுகத்தில் மரைன் என்ஜினீயர், மெடிக்கல் ஆபீஸர், அசிஸ்டண்ட் என்ஜினீயர் உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு ஜனவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

கண்ட்லா துறைமுகமானது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. நாட்டிலுள்ள பெரிய துறைமுகங்களில் இதுவும் ஒன்று. நாட்டின் சர்வதேச வர்த்தகத்தில் இந்தத் துறைமுகமும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

அசிஸ்டண்ட் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர், அசிஸ்டண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர், அசிஸ்டண்ட் ஃப்ளோட்டிலா சூப்பர்வைஸர், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை the Office of the Secretary, Kandla Port Trust, Administrative Office Building, Gandhidham- Kachchh, Gujarat State-370201 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் 15-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

English summary
Kandla Port Trust invited applications for recruitment to the post of Marine Engineer, Medical Officer, Assistant Engineer (Dredger/Tug), Assistant Electrical Engineer (Floating Craft), Assistant Executive Engineer (Mechanical), Assistant Flotilla Supervisor and Driver Ist Class (Marine). The candidates eligible for the post can apply through prescribed format on or before 15 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia