வேலை தேடும் இளைஞர்களே... பச்சையப்பன் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம்!!

Posted By:

சென்னை: வேலை தேடும் இளைஞர்களுக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 27-ம் தேதி இந்த முகாமை பெரிய அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமை அன்னம்மாள் இன்ஸ்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் www.hotelierstalk.com இணைந்து பிரமாண்டமான முறையில் நடத்துகிறது.

வேலை தேடும் இளைஞர்களே... பச்சையப்பன் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம்!!

இதில் ஸ்டார் ஹோட்டல்கள் , சொகுசு கப்பல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், ரெசார்ட்டுகள், ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு வழங்குகின்றன. இதில் வேலை தேடும் மாணவர்கள் கலந்துகொண்டு வேலையைப் பெற முடியும்.

இந்த வேலைவாய்ப்பு முகாமல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9.00 - மாலை 5.00 மணி வரை முகாம் நடைபெறும். இதில் 10-ம் வகுப்பு முதல் பட்டம், பட்டயம் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எந்த முன்பதிவும் தேவையில்லை. நேரடியாக முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். வரும்போது தங்களது சான்றிதழ்களைக் கொண்டு வருவது அவசியமாகும். தகவலுக்கு: 9884930477- க்கு தொடர்பு கொள்ளவும்.

English summary
A Mega Jobfair will be held in Chennaoi Pachaiappa`s college which is located in Aminjikarai. www.hotelierstalk.com and Annammal Institute of Hetel Management has arranged the job mela in chennai.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia