2020ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேவு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்ற நிலையில், இத்தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கி, 6ம் தேதி வரையில் நடைபெற்று முடிந்தது. இதில், நாடு முழுவதும் இருந்து 660 மையங்களில் 9 லட்சத்து 53 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த இத்தேர்விற்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பைத் தனது டிவிட்டர் வெளியிட்டுள்ளார். அதில், இத்தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும், பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவில் ஜேஇஇ தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜேஇஇ அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியானபோது இந்தத் தேர்விற்கான முடிவு செப்டம்பர் 11ம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.