டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஜேஇஇ தேர்வை சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஐஐடி-யில் இடம் இலவசமாகக் கிடைக்கிறது.

இந்த நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது சிபிஎஸ்இ. மார்ச் 11 முதல் இந்த ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் கிடைக்கின்றன.
ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்ய http://jeemain.nic.in/webinfo/Public/Home.aspx என்ற லிங்க்கை கிளிக் செய்யவும். அந்த இணையதள பக்கம் வந்தது அங்கு விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவைற்றைக் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்.
இந்தத் தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். மொத்தம் 12.07 லட்சம் பேர் இந்தத் தேர்வு எழுதவுள்ளனர்.


Click it and Unblock the Notifications

