இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயர், விஞ்ஞானி பணியிடங்கள்.!!

By Vasu Shankar

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) என்ஜினீயர், விஞ்ஞானி பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயர், விஞ்ஞானி பணியிடங்கள்.!!

மொத்தம் 375 விஞ்ஞானி, என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியில் சேர பி.இ., அல்லது பி.டெக் அல்லது அதற்கு ஈ டான படிப்பை படித்திருக்கவேண்டும். மேலும் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 35-க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஊதியமாக ரூ.15,600 முதல் ரூ.39,100 பிளஸ் ரூ.5,400 என்ற அடிப்படையில் தரப்படும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மட்டுமே கட்டணம் பெறப்படும். பெண்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

இந்த வேலையில் ஆன்-லைனில் விண்ணப்பங்களை மே 25-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://www.isro.gov.in/careers என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    Applications are invited by Indian Space Research Organization (ISRO), Department of Space, Government of India for 375 Scientist/Engineer SC Posts. Details of the this recruitment is listed below. Name of the Post and Number of Posts Scientist/Engineer SC Posts Computer Science- 50 Posts Mechanical- 109 Posts Electronics- 216 Posts Who is Eligible for the ISRO Job? Qualification: Applicants should have BE/ B.Tech or equivalent qualification in first class with minimum of 65% marks. Age Limit: 35 years (as on 25.05.2016) Pay Scale: Rs. 15600- Rs. 39100/- (Grand pay of Rs. 5400/-) Application Fee: General and OBC: Rs. 100/- Women candidates and others: No fee

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more