புதுடெல்லி: ஊழல் தடுப்புப் பாடங்களை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ஜஸ்பால் எஸ். சாந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஊழல் தடுப்பு தொடர்பான பாடங்களை கல்லூரிகளில் அறிமுகம் செய்யவேண்டும். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி இதை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்ய யுஜிசி உத்தரவிடுகிறது.
ஊழல், ஊழல் பிரச்னையால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள், ஊழலைத் தடுப்பது எப்படி உள்ளிட்டவை பாடங்களாக வைக்கப்படவேண்டும்.
விரைவில் இதுபோன்ற பாடங்களை பள்ளிகளில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர் பருவத்திலேயே ஊழல் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

