உலகின் முதன்மையான மொழிகளில் ஒன்று தமிழ். செம்மொழி அங்கீகாரம் பெற்ற முதல் இந்திய மொழி என்ற அந்தஸ்தையும் பெற்றது தமிழ் மொழியாகும்.
அத்தகைய பெருமை பெற்ற தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது.

கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில், 2022-23ம் கல்வியாண்டிற்கான தமிழ் ஆய்வியல் நிறைஞர் M.Phill (Tamil) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் M.Phill (Tamil), இந்நிறுவனத்தில், ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 2022-23 ம் கல்வியாண்டிற்கான மேற்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைத்தள www.ulakaththamizh.in வழியாக, தமிழ்ப் பல்கலைக்கழக இணையதள முகவரியில் www.tamiluniversity.ac.in தரப்பட்டுள்ள இணைப்பு வழியாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தமிழ்ப் பல்கலைக்கழக வலைத்தளத்திலும் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்களை இணைய முகவரியில் (www.ulakaththamizh.in) வழங்கப்பட்டுள்ளது.

இரு பாலருக்கென தனித்தனியே கட்டணமில்லா தங்கும் விடுதி வசதிகளும் உள்ளன. முதலில் வருபவர்களுக்கே, முன்னுரிமை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ, இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
இயக்குநர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இரண்டாம் முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை-600113.
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பம் (வாட்ஸ்அப் எண் குறிப்பிட்டு) வந்து சேர வேண்டிய இறுதி நாள் செப்டம்பர் 7ம் தேதி ஆகும்.
கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள 044-22542992 என்ற தொலைப்பேசி எண்ணிலும் அல்லது இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 என்ற முகவரியிலும், தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.
தமிழ் மொழி புலமையை மட்டும் வைத்து, உலக நாடுகளில் கோலோச்சி வரும் முக்கிய ஆளுமைகளும் உள்ளனர் என்பதை, இன்றைய இளைஞர்கள் மறந்து விடாதீர்கள்.


Click it and Unblock the Notifications












