டெல்லி: டெல்லியிலுள்ள இந்தியன் லா இன்ஸ்டிடியூட்டில் (ஐஎல்ஐ) எல்எல்எம், பிஎச்.டி படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2016-ம் கல்வியாண்டுக்கான படிப்பாகும் இது.
இந்தப் படிப்பில் சேர எல்எல்பி படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பார் கவுன்சில் ஆஃப் இந்தியா அங்கீகரித்துள்ள இன்ஸ்டிடியூட்டில் இந்தப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

வெளிநாடுகலில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் எல்எல்பி-க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பிஎச்டி படிக்க, எல்எல்எம் பட்டப்பிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
இந்தப் படிப்பில் சேர அகில இந்திய பொது சேர்க்கைத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். இந்தத் தேர்வை இந்தியன் லா இன்ஸ்டிடியூட் நடத்துகிறது.
யுஜிசி நெட், ஜேஆர்எஃப், ஸ்லெட், எம்.பில் தேர்ச்சி பெறாதவர்கள் எழுத்துத் தேர்வில் வெற்றி பெறவேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பிஎச்.டி. படிப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
எல்எல்எம் படிப்புக்கு விண்ணப்பக்க ஜூன் 2 கடைசி நாளாகும். பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 1-ம் தேதி கடைசி நாளாகும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications












