பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் பெங்களூரின் ஐஐஎஸ்சி முதலிடம்!!

டெல்லி: நாட்டில் பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்(ஐஐஎஸ்சி) முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இந்தியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலைத் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஐஐஎஸ்சி முதலிடம் பெற்றுள்ளது.

பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் பெங்களூரின் ஐஐஎஸ்சி முதலிடம்!!

மும்பையிலுள்ள தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி 2-வது இடத்தையும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும், ஹைதராபாத் பல்கலைக்கழகம் 4-வது இடத்தையும், அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் பல்கலைக்கழகம் 5-வது இடத்தையும் பிடித்துள்ளது.

நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேங்க்கிங் பிரேம்ஒர்க் (என்ஐஆர்எஃப்) உதவியுடன் இந்த தரவரிசைப்பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பட்டியலை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்டுளளார். பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் 6-வது இடத்தை யுனிவர்சிட்டி ஆஃப் டெல்லியும், 7-வது இடத்தை வாரணாசி பல்கலைக்கழகமும், 8-வது இடத்தை கேரள மாநிலத்திலுள்ள தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸும் பிடித்துள்ளன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Indian Institute of Science at Bengaluru (IISc) in Karnataka has been ranked the best in university category of 'India Ranking 2016' by the union HRD ministry. The Institute Of Chemical Technology, Mumbai, follows in second place. Jawaharlal Nehru University was ranked third, followed by the University of Hyderabad and Tezpur University, Assam.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X