டெல்லி ஐஎம்ஐ-யில் பி.ஜி. டிப்ளமோ படிக்க வாய்ப்பு!

Posted By:

சென்னை: டெல்லியிலுள்ள இன்டர்நேஷனல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட்டி(ஐஎம்ஐ) 15 மாத எக்சிகியூட்டிவ் பி.ஜி. டிப்ளமோ படிப்புகளைப் படிக்க வாய்ப்பு வந்துள்ளது.

2016-17-ம் கல்வியாண்டில் இந்த 15 மாத படிப்புகளை படிக்க முடியும். இந்த படிப்புகளைப் படிக்க விரும்புவோர் இளநிலை பட்டபடிப்புகளை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்து முடித்திருக்கவேண்டும். 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும்.

டெல்லி ஐஎம்ஐ-யில் பி.ஜி. டிப்ளமோ படிக்க வாய்ப்பு!

ஆங்கிலம் எழுதவும், பேசவும் நன்கு தெரிந்திருக்கவேண்டும். பட்டப்படிப்பு முடித்து 5 ஆண்டுகள் நிறைந்திருக்கவேண்டும். வேலை பார்த்து வரும் நிறுவனங்கள் மூலமும் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம்.

விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் ஐஎம்ஐ இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கட்டணம் ரூ.1,500 ஆகும். கட்டணத்தை கேட்புக் காசோலையாக(டி.டி) யாக எடுத்து செலுத்தவேண்டும். டி.டி. International Management Institute என்ற பெயரில் டெல்லியில் செலுத்தப்படத்தக்கதாக எடுக்கப்படவேண்டும்.

இதன் பின்னர் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடைபெறும். நேர்முகத் தேர்வின்போது தேவையான சான்றிதழ்களைக் கொண்டு வரவேண்டும்.

ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி அடுத்த ஆண்டு பிப்ரவரி 17 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு டெல்லி ஐஎம்ஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.imi.edu/delhi-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
International Management Institute (IMI), New Delhi has invited applications for admission to 15 months executive Post Graduate Diploma in Management (PGDM) programme. Admissions are offered for the academic session 2016-17. For more information on college and courses visit the official website http://www.imi.edu/delhi

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia