சென்னை: ரூர்கியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில்(ஐஐடி) அசோசியேட் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிபப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களுக்கு ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மொத்தம் 20 பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் பிளானிங், பயோடெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.iitr.ac.in/administration/pages/Openings Faculty.html என்ற லிங்க்கைத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பலாம்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பள விவரம் போன்றவற்றை ரூர்க்கி ஐஐடி இணையதளமான -ல் காணலாம்.
ரூர்க்கி ஐஐடி-யானது 1847-ல் நிறுவப்பட்டதாகும். உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி நகரில் அமைந்துள்ளது. 1949-ல் இதற்கு பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்தது. 2001-ல் இது ஐஐடி-யாக மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications

