ஐஐடி ரூர்க்கியில் பிஎச்.டி. படிக்க ஆசையா?

Posted By:

சென்னை: ஐஐடி ரூர்க்கியில் பிஎச். டி. படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

2016-ம் கல்வியாண்டில் இந்த படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்த படிப்பில் சேர பட்டமேற்படிப்பை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது இன்ஸ்டிடியூட்டில் பயின்று இருக்கவேண்டும்.

ஐஐடி ரூர்க்கியில் பிஎச்.டி. படிக்க ஆசையா?

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவர்.

http://www.iitr.ac.in/ என்ற இணையதள முகவரியை மாணவர்கள் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விண்ணப்பித்த பிறகு விண்ணப்பங்களை பிரிண்ட்-அவுட் எடுத்து 'PG Admissions Office, IIT Roorkee, Roorkee - 247667, Uttarakhand' என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

ஐஐடி ரூர்க்கியில் பிஎச்.டி. படிக்க ஆசையா?

விண்ணப்பக்கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப பிப்ரவரி 29 கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த மார்ச் 2 கடைசி நாள். பிரிண்ட் அவுட் விண்ணப்பங்கள் மார்ச் 4-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.

English summary
The Indian Institute of Technology (IIT), Roorkee has invited applications from eligible candidates for admission to Doctor of Philosophy (PhD) programme in several departments for the session 2016. Interested candidates should apply online latest by February 29.Educational qualification:Candidates should have acquired a Master's degree in the respective discipline from a recognised university or institute. Important dates: Last date to apply: February 29, Last date for deposit of application fee: March 2,Last date for receiving of downloaded application form: March 4 .

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia