ஆசிரியல்லாத பணிகள்! மெட்ராஸ் ஐஐடி அழைக்கிறது!!

Posted By:

சென்னை: ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மெட்ராஸ் ஐஐடி-யில் காலியாக உள்ளதாக அறிவப்பு செய்யப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஐஐடி-யில் சூப்பிரடெண்டிங் என்ஜினீயர், துணைப் பதிவாளர், உதவிப் பதிவாளர், மருத்துவ அதிகாரி, டெக்னிக்கல் அதிகாரி, உடற்கல்வி அதிகாரி, ஜூனியர் சூப்பிரடெண்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

ஆசிரியல்லாத பணிகள்! மெட்ராஸ் ஐஐடி அழைக்கிறது!!

மொத்தம் 70 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 17-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மெட்ராஸ் ஐஐடி-யின் இணையதளமான http://www.iitm.ac.in -ல் காணலாம்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

மெட்ராஸ் ஐஐடி உயர்கல்வி நிறுவனமானது 1959-ல் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் அமைந்துள்ளது. சுயாட்சி கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் உலக அளவில் புகழ்பெற்றதாகும். மத்திய அரசு அமைத்த 3-வது ஐஐடி இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian Institute of Technology Madras (IIT Madras) invited applications for the posts of Superintending Engineer, Deputy Registrar, Assistant Registrar, Medical Officer, Technical Officer, Physical Education Officer, Junior Superintendent, Junior Engineer, Junior Technical Superintendent, Junior Technician, Junior Assistant and Security Guard. The elig The selection of the candidates will be done on the basis of the interview/exam conducted by the commission.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia