IIT-Madras என்பிடிஇஎல் மாணவர்களுக்கு உதவித்தொகை:10 ஆயிரம் மாணவர்களுக்கு சான்றிதழ் கட்டண உதவி...!

IIT-Madras 10K Students Fee Assist:அனுபவம் வாய்ந்த டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான சதர்லாண்ட் சென்னை ஐஐடியுடன் இணைந்து, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள 10,000 மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கவுள்ளது.

சதர்லாண்டின் உலகளாவிய கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு முன்முயற்சியான கார்ப்பரேட் குடிமக்கள் திட்டத்தின் மூலம் இந்த உதவி வழங்கப்படுகிறது.

சான்றிதழ் கட்டண உதவி 10 ஆயிரம் மாணவர்கள்...!

இந்த திட்டம் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் பெறுவதற்கான செலவை 50 சதவீதம் அளவிற்கு குறைக்க கல்வி உதவித்தொகையை வழங்குகிறது. 2022 ஜனவரிக்கான விரிவடைந்த தொழில்நுட்ப கற்றல் குறித்த தேசிய திட்டத்தின் செமஸ்டர் ஆன்லைன் தேர்வில் சான்றிதழ் பெற இந்த உதவித்தொகை பயன்படும்.10

ஆயிரம் மாணவர்கள்

நாடு முழுவதும் உள்ள 18 மாநிலங்களின் 160 கல்லூரிகளைச் சேர்ந்த 10,000 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

என்.பி.டி.இ.எல்., ஒருங்கிணைப்பாளரும், சென்னை ஐஐடி பேராசிரியருமான ஆண்ட்ரூ தங்கராஜ், இந்த திட்டம் பற்றி கூறுகையில்,"சதர்லாண்டின் இந்த தாராளமான உதவியால் குடும்பத்தின் முதல் தலைமுறை மாணவர்கள், என்பிடிஇஎல் சான்றிதழை பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்" என்றார்.

சதர்லாண்டின் உலகளாவிய மக்கள் செயல்பாட்டு பணியின் மூத்த துணைத்தலைவர் அனில் ஜோசப், "எதிர்கால தலைவர்களின் கல்விக்கான எங்கள் முதலீடு டிஜிட்டல் பரிவர்த்தனையில் திறனை வளர்ப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது" என்றார்.

பொறியியல், கலை, வணிகவியல், அறிவியல், நிர்வாகவியல் உட்பட நாடு முழுவதும் உள்ள 5,000 கல்லூரிகளுடன் என்பிடிஇஎல் தற்போது நெருக்கமாக பணியாற்றி வருகிறது.

தங்களின் துறைகளில் நவீன திறன்களுடன், தங்களை மேம்படுத்திக்கொள்ளவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், இந்த சான்றிதழ் தேர்வுகளுக்கு ஏராளமான மாணவர்களை இந்த திட்டம் தயார்ப்படுத்துகிறது.

மத்திய கல்வித்துறையின் கீழ், சென்னை ஐஐடி, இந்திய அறிவியல் கல்விக்கழகம் (ஐஐஎஸ்சி) உள்ளிட்ட ஐஐடிகளின் கூட்டு முன்முயற்சியாக என்பிடிஇஎல் உள்ளது.

அறிவியல், சமூகவியல், நிர்வாகவியல் போன்ற துறைகளில் தேசிய பெருந்திரள் திறந்தநிலை இணைய வகுப்புகளுக்கான https://swayam.gov.in/ என்ற இணைய பக்கத்தில் ஒவ்வொரு செமஸ்டரின் போதும், 600க்கும் அதிகமான சான்றிதழ் படிப்புகளை என்பிடிஇஎல் வழங்குகிறது.

1.4 லட்சம் பேர் பயன்

இதுவரை 1.9 கோடிக்கும் அதிகமான பயில்வோர் என்பிடிஇஎல் பாட வகுப்புகளில் இணைந்துள்ளனர். 1.4 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் என்பிடிஇஎல் வீடியோக்களை பெற்றுள்ளனர்.

1.4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், என்பிடிஇஎல் தேர்வு உதவித்தொகை மூலம் பயனடைந்துள்ளனர்.

கூடுதல் விவரங்களுக்கு.... கிளிக் ப்ளீஸ்...!

https://www.iitm.ac.in/

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Scholarships for NPDEL students: IIT Chennai and Sutherland will provide scholarships to 10,000 students under the National Program on Advanced Technical Learning (NPDEL).
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X