டெல்லி: காரக்பூர் ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் புராஜக்ட் ஆபீஸர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 3-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். ஒரு புராஜக்ட் ஆபீஸர் பணியிடமும், 3 புராஜக்ட் அசிஸ்டண்ட் பணியிடங்களும் இங்கு காலியாக இருக்கின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ட பட்டமேற்படிப்பு படித்திருக்கவேண்டும். மேலும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளும் இருக்கும்.
ஊதியமாக ரூ.18,000-ரூ.25,000 என்ற அளவில் இருக்கும். பணியிடங்கள் காரக்பூரிலேயே இருக்கும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்களை தபால் மூலம் dministrative Officer (Projects), Sponsored Research and Industrial Consultancy, Indian Institute of Technology, Kharagpur 721302 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி மே 3 ஆகும். கல்வித் தகுதி, வயதுச் சலுகை, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களை அறிந்துகொள்ள http://www.iitkgp.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்


Click it and Unblock the Notifications
