புதுடெல்லி: காரக்பூர் நகரில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) பிஎச்.டி படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்ஜினீயரிங், டெக்னாலஜி, சயின்ஸ், ஆர்க்கிடெக்ச்சர், ரீஜனல் பிளானிங், ஹியூமானிட்டீஸ், சோசியல் சயின்ஸஸ், லா அண்ட் மேனேஜ்மெண்ட் பிரிவுகளில் பிஎச்.டி. பயிலலலாம். 2016-17-ம் கல்வியாண்டுக்கான அறிவிப்பாகும் இது. இந்தப் படிப்பு பயில விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கவேண்டும். மேலும் வேலை பார்த்த அனுபவமும் இருக்கவேண்டும்.

படிப்பு பயில விரும்புபவர்கள் ஐஐடி காரக்பூர் இணையதளத்துக்குச் சென்று ரூ.500 விண்ணப்பக் கட்டணத்தை ஆன்-லைனில் செலுத்தி விண்ணப்பம் செய்யலாம்.எஸ்சி, எஸ்டி பிரிவிருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாகும். பெண்களுக்கு இந்தக் கட்டணம் கிடையாது.
நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் மாணவ, மாணவிகள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 17 கடைசி நாளாகும்.
கூடுதல் விவரங்களுக்கு http://www.iitkgp.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
