புதுடெல்லி: கான்பூர் ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் உதவி திட்ட மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மொத்தம் 33 உதவித் திட்ட மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த வேலையில் சேர பட்டமேற்படிப்பை முடித்திருககவேண்டும். இந்த வேலைக்கு ஊதியமாக ரூ. 11,000 - Rs 22,000 என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை The Principal, Campus School, Indian Institute of Technology Kanpur, Kanpur- 208016 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மார்ச் 28 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதியாகும். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 2 அல்லது 3-வது வாரத்தில் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு http://www.iitk.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












