சென்னை : இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐசி) உள்பட நாட்டில் உள்ள பல முக்கிய கல்வி நிறுவனங்களில் பொறியியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வில் ஜெய்ப்பூரின் ஹர்ஷ் குப்தா முதலிடம் பிடித்துள்ளார்.
2017ம் ஆண்டிற்கான கேட் தேர்வு முடிவுகள் இன்று www.gate.iitr.ac.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஹர்ஷ் குப்தா கெமிக்கல் எஞ்ஜீனியரிங்கில் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
கேட் 2017ம் ஆண்டிற்கான தேர்வில் 22 வயது நிரம்பிய ஹர்ஷ் குப்தா 1000க்கு 999 மார்க்குள் எடுத்து முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் ஜெய்ப்பூர் மால்வியா நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் பி.டெக் படிப்பில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.
ஹர்ஷ் குப்தா கேட் தேர்வில் முதலிடம் பெற்றிருப்பதால் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த மகிழ்சிசியில் உள்ளனர். அவருடைய தந்தை சந்தோஷ்குமார் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் புள்ளியியல் துறையில் அஸோஸியேட் புரபசராக பணியாற்றி வருகிறார். அவரின் தாய் ஹோம்மேக்கர்.
ஹர்ஷ் குப்தாவின் அண்ணன் ஐபிஎம் டெல்லி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஹர்ஷ் குப்தாவின் அப்பா, அண்ணன் என அனைவரும் எஞ்ஜீனியரிங் படித்தவர்கள் என்பதால் தான் ஒரு எஞ்ஜீனியரிங் குடும்பத்தைச் சார்ந்தவர் என சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்.
கேட்தேர்வி மதிப்பெண்களைக் கொண்டு முதுகலைப் படிப்பிலும் சேரலாம் அல்லது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பஷேன், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கமிஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு பொதுத்-துறை நிறுவனங்களும் கேட் தேர்வின் அடிப்படை-யில் தகுதியுடையவர்களை வேலைக்குத் தேர்வு செய்கின்றன
ஹர்ஷ் குப்தா பொதுத்துறை ஒன்றில் சேர்ந்து சிறிது காலம் வேலை செய்து விட்டு பின்பு முதுகலைப் படிப்பிற்காக வெளிநாட்டிற்குச் செல்ல இருப்பதாகக் கூறியுள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஐஐஎஸ்சி, ஏழு ஐஐடிக்கள் இணைந்து கேட் தேர்வை நடத்துகின்றன. 2017ம் ஆண்டிற்கான கேட் தேர்வை நடத்தும் பொறுப்பை ரூர்க்கி ஐஐடி ஏற்றுக் கொண்டுள்ளது.
கேட் தேர்வை எழுதி தகுதிபெறும் மாணவர்கள் முதுநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் வழங்கும் உதவித்தொகையைப் பெற முடியும்.