சென்னை: ஐஐடி காந்தி நகரில் பிஎச்.டி படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள ஐஐடி பெருமைவாய்ந்த ஒரு உயர்கல்வி நிறுவனமாகும். இங்கு தற்போது பிஎச்.டி படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பயலாஜிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங், வேதியியல், சிவில் என்ஜினீயரிங், காக்னட்டிவ் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், எர்த் சயின்ஸஸ், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகளில் பிஎச்.டி படிப்புகள் படிக்க முடியும்.
எம்ஏ, எம்.எஸ்சி, பிடெக், எம்டெக் படிப்புகளில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த வகுப்புகளில் சேர முடியும்.
விருப்பம் உள்ளவர்கள் ஐஐடி காந்திநகர் இணையதள முகவரிக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி செப்டம்பர் 25 ஆகும். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு செய்து அறிவிக்கப்படும் நாள் அக்டோபரர் 9 ஆகும்.
அதைத் தொடர்ந்து அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் நவம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு ஐஐடி காந்திநகர் இணையதளமான http://www.iitgn.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












