டெல்லி: காந்திநகர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) எம்.டெக் படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கெமிக்கல் என்ஜினீயரிங் (நேனோ டெக்னாலஜி, கலோயிட்ஸ், இன்டர்பேஸ், கெமிக்கல் ரீஆக்ஷன் என்ஜினீயரிங், செப்பரேஷன் பிராசஸஸ், பாலிமர்ஸ், பிராஸஸ் கன்ட்ரோல்), சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜனீயரிங், மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவுகளில் எம்.டெக் பயிலலாம்.

இந்தப் படிப்பு படிக்க பிஇ அல்லது பிடெக் படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் கேட் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள் இந்தப் படிப்புக்கு ஆன்0லைனில் விண்ணப்பம் செய்யலாம்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவ, மாணவிகள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவர்.
மார்ச் 20 முதல் விண்ணப்பங்கள் ஆன்-லைனில் கிடைக்கின்றன. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 8 ஆகும். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 21-ம் தேதி நடைபெறும். எழுத்துத் தேர்வு மே 15 முதல் மே 19-க்குள் நடைபெறும்.
தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் மே 7-ம் தேதி அறிவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு http://www.iitgn.ac.in/mtech.htm என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
