சென்னை: ஆன்லைனில் தெர்மோடைனமிக்ஸ் படிப்புகளை படிக்கும் வாய்ப்பை மும்பை ஐஐடி அளிக்கிறது.
மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் இந்த பிரிவை மாணவர்கள் பயில முடியும். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பு பயிலும் மாணவர்கள், இந்த ஆன்லைனஅ படிப்பை பயில ஏதுவாக இருக்கும். தெர்மோடைனமிக்ஸின் அடிப்படை விஷயங்கள், தெர்மோடைனமிக்ஸின் பயன்பாடு குறித்த விவரங்கள் இந்த ஆன்லைன் படிப்பில் இருக்கும்.

மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல், வேதியியல் படிப்பு தொடர்பான அடிப்படை விஷயங்கள் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த ஆன்லைன் படிப்பை பயில இயலும். மேலும் கணித அறிவும் இருக்கவேண்டும்.
20 வாரங்கள் கொண்டதாக இருக்கும் இந்தப் படிப்பு.
வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி இந்தப் படிப்பு தொடங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு https://www.edx.org/course/thermodynamics-iitbombayx-me209-1x-0 என்ற இணையதள முகவரியைத்தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












