ஐஐடி பனாரஸ் ஹிந்து பல்கலை.யில் படிக்கப் போறீங்களா...!!

Posted By:

டெல்லி: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் எம்.டெக், எம்.பார்ம், பிஎச்.டி. படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

என்ஜினீயரிங், பார்மஸி, சயின்ஸஸ் அண்ட் ஹியூமானிட்டி ஸ்டடீஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இங்கு பிஎச்.டி. படிப்புகளை பயில முடியும். 2016-ம் கல்வியாண்டில் மாணவ, மாணவியர் சேர்க்கை இங்கு நடைபெறவுள்ளது.

ஐஐடி பனாரஸ் ஹிந்து பல்கலை.யில் படிக்கப் போறீங்களா...!!

எம்.டெக், எம்.பார்ம் படிக்க விரும்புபவர்கள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

பிஎச்.டி. படிக்க விரும்புபவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மேலும் கேட், ஜிபிஏடி தேர்விலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

கேட், ஜிபிஏடி தேர்வு அடிப்படையில் மாணவர், மாணவியர் தேர்வு நடைபெறும். அதேபோல எம்.டெக், எம்.பார்ம் படிப்புக்கு பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு நடைபெறும்.

விண்ணப்பங்களை ஏப்ரல் 28-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப கீழ்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

http://pgadmission.iitbhuacademics.com/register/register/

கூடுதல் விவரங்களுக்கு http://www.bhu.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளவும்.

English summary
Applications are invited by Indian Institute of Technology-Banaras Hindu University (IIT-BHU) for admission to Master of Technology (M.Tech), Master of Pharmacy (M.Pharm) and Doctor of Philosophy (Ph.D) in Engineering, Pharmacy, Sciences and Humanistic Studies.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia