டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நகரிலுள்ள ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தில் ரிசர்ச் அசோசியேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
ரிசர்ச் அசோசியேட் பணியிடங்களுக்கான விண்ணப்பமாகும் இது. இந்த வேலையில் சேர்வதற்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டமேற்படிப்பு படித்திருக்கவேண்டும்.

வயது 30 முதல் 35-க்குள் இருக்கலாம்.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு எழுத்துத் தேர்வு அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடைபெரும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வேலை உறுதியாகும்.
இந்தப் பணியிடங்துக்கு விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பலாம். தகுந்த ஆவணங்கள், சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டும்.
விண்ணப்பங்கள் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பவேண்டும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.iiml.ac.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












