புதுடெல்லி: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள தரவரிசையில் மெட்ராஸ் ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேங்க்கிங் பிரேம்ஒர்க் (என்ஐஆர்எஃப்) என்ற பெயரில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதில் என்ஜினீயரிங் இன்ஸ்டிடியூட்டுகளில் மெட்ராஸ் ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதேபோல பெங்களூரு ஐஐஎம் உயர் கல்வி நிறுவனம் நிர்வாகவியல் படிப்புகளை வழங்கும் இன்ஸ்டிடியூட்டுகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
நிர்வாகவியல் இன்ஸ்டிடியூட்டுகளில் ஆமதாபாத் ஐஐஎம் 2-வது இடத்தையும், ஐஐஎம் கொல்கத்தா 3-வது இடத்தையும் பெற்றுள்ளது.
இதைப் போலவே என்ஜினீயரிங் இன்ஸ்டிடியூட் தரவரிசையில் பம்பாய் ஐஐடி 2-வது இடத்தையும், காரக்பூர் ஐஐடி 3-வது இடத்தையும் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications

