டெல்லி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் அமைந்துள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் (ஐஐஐடி) ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடத்துக்கு ஏப்ரல் 22-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம். இங்கு ஒரே ஒரு ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது.

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், என்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ முடித்திருக்கவேண்டும்.
தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
Priyanka Srivastava, PhD Senior Research Scientist Cognitive Science Lab, International Institute of Information Technology, Hyderabad, Telangana, 500032. இந்தப் பணியிடத்துக்கான வாக்-இன்-இன்டர்வியூ மே 6-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரை நடைபெறும். விண்ணப்பங்களை ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு http://www.iiit.ac.in என்ற இணையதள முகவரியைத்தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

