டெல்லி: குளுகுளு நகரமான கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் (ஐஐஐடி) எம்.எஸ். படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2016-ம் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்ளாகும் இது. எம்.எஸ்சி படிப்புக்கான விண்ணப்பங்களை மட்டும் அனுப்பினால் போதுமானது. இந்தப் படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில்தான் அனுப்பவேண்டும். விண்ணப்பக்க் கட்டணமாக ரூ.1,000 செலுத்தப்படும். தேர்வுக்காக எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் வெறறி பெற்றால் மட்டுமே இந்தக் கல்லூரியில் இடம்கிடைக்கும்.
ஆன்-லைன் ழிண்ணப்பங்களை மே 23-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை மே 29, 30-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்-லைனில் விண்ணப்பம் செய்ய கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்...


Click it and Unblock the Notifications
