டெல்லி: எம்பிஏ படிக்க நுழைவுத் தேர்வு ஐஐஎச்எம்ஆர் பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது.
ஸ்கூல் ஆஃப் ரூரல் மேனேஜ்மெண்ட் சார்பில் இந்தத் தேர்வு ஆன்-லைன், ஆஃப்லைன் முறையில் நடத்தப்படுகிறது. இந்தத் தகவலை ஐஐஎச்எம்ஆர் பல்கலைக்கழக தலைவர் எஸ்.டி. குப்தா தெரிவத்துள்ளார்.

இந்தத் தேர்வுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆன்-லைன் தேர்வு ஜூன் 7-ம் தேதி நடைபெறும். பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, நொய்டா நகரங்களில் தேர்வு நடத்தப்படும். இந்த ஆஃப்லைன் ரூரல்எம்ஏடி தேர்வு ஜூன் 10-ம் தேதித நடைபெறும். விண்ணப்பங்களை மே 30-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://www.iihmr.edu.in/mba-rm/faqs-of-iihmr-rural-mat or https://iihmr.edu.in/academic/rural-management-faq என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளவும்.


Click it and Unblock the Notifications

