இந்திய விமானப் படையில் கிளார்க் வேலை இருக்கு!

Posted By:

சென்னை: இந்திய விமானப் படையில் (IAF) கீழ்நிலை கிளார்க் (LDC) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான அறிவிப்பை எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது இந்திய விமானப்படை. விளம்பரம் வெளியான 30 நாள்களுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

இந்திய விமானப் படையில் கிளார்க் வேலை இருக்கு!

மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆங்கிலம், ஹிந்தி டைப்பிங் தெரிந்திருக்கவேண்டும்.

வயது 18 முதல் 27-க்குள் இருக்கவேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுச் சலுகைகள் உண்டு.

விண்ணபப்பங்களை சுய விலாசமிட்ட கவருடன் 5 ரூபாய் தபால் தலை ஓட்டி தகுந்த ஆவணங்களுடன் விண்ணபப்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://indianairforce.nic.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.

English summary
Indian Air Force (IAF) invited applications for the posts of Lower Division Clerk (LDC). The eligible candidates can apply to the posts through the prescribed format within 30 days from the date of publication of the advertisement in the Employment News. Indian Air Force Vacancy Details Lower Division Clerk (LDC) - 07 Posts.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia