தனியார் பள்ளிகளில் 96.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாயின. இந்த முறை தனியார் பள்ளிகளில் படித்த 96.7 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு முடிவுகளை மாணவச் செல்வங்கள் http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிவடைந்தன. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ம்தேதி முதல் 13-ம் தேதி வரை நடந்தது. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணிகள், 83 மையங்களில், 30,000-த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் வாயிலாக சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து விடைத்தாள் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும், மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்புப் பணியும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திட்டமிட்டபடி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகளை, தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் 96.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

இந்த ஆண்டு, தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதமாக அதகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 2,478 பள்ளிகளில் படித்த மாணவர்கள் நூறு சதவீதம் தேரச்சி பெற்றுள்ளனர். இதில், 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி என்ற சாதனையைப் படைத்துள்ளன. இது மிகப்பெரிய செய்தியாக இணையத்தில் உலவி வருகிறது.

இந்த முறையும் வழக்கம் போல தனியார் பள்ளிகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் 96.70 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மகளிர் பள்ளிகள் 96.39 சதவீத அளவில் தேர்ச்சி பெற்றுள்ளன.

பள்ளிகள் வாரியாக பெற்ற தேர்ச்சி விகிதம் வருமாறு:

அரசுப் பள்ளிகள் 91.32%

அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 95.49%

தனியார் பள்ளிகள் 96.7%

மகளிர் பள்ளிகள் 96.39%

ஆண்கள் பள்ளிகள் 86.96%

இருபாலர் பள்ளிகள் 94.7%

வழக்கம் போல இந்த ஆண்டும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Directorate of Government Examinations (DGE) on May 6 announced the Tamil Nadu Class 12 result. The TN HSC plus 2 result 2024 can be checked at dge.tn.gov.in and tnresults.nic.in. In this results 96.7 Private school students have passed in the exams. About 94.56% students pass TN HSE +2 exams. Around eight lakh students who took the TN Class 12 board 2024 exams can check their TNDGE Class 12 result using their roll number and date of birth.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+