டெல்லி: ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிளஸ்-2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
2015-16-ம் கல்வியாண்டுக்கான இந்தத் தேர்வு மார்ச் மாதம் நடைபெற்றது. அந்தத் தேர்வுக்கான முடிவுகளை ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் கல்வி வாரியம் (எச்பிபிஓஎஸ்இ) தனது அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.hpbose.org/ -ல் வெளியிட்டுள்ளது.

சுமார் 1 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளைக் கண இணையதளத்துக்குச் சென்று 'Plus Two Result March-2016' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும்.
பி்ன்னர் அந்த இடத்தில் தேர்வு பதிவு எண், பிறந்ததேதி போன்ற விவரங்களைக் கொடுத்தால் மதிப்பெண் விவரங்கள் தெரியவரும்.
அதை பிரிண்ட் -அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலத்துக்குப் பயன்படுத்தலாம்.
தேர்வு முடிவுகளைப் பெற முடியாதவர்கள் அதுதொடர்பான புகார்களை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்,.


Click it and Unblock the Notifications

