சென்னை: அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விரைவில் தமிழ்த்துறை அமைக்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவில் பிறந்த 2 டாக்டர்களின் முயற்சியால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமையவுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் 100 வருடத்துக்கும் மேலாக சமஸ்கிருத இருக்கை அமைந்து கல்வி சேவையாற்றி வருகிறது. இப்போது சங்கம் தமிழ் இருக்கையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாசாசுசெட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைை அமைப்பதற்கு சுமார் ரூ.40 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் இந்தத் துறையை அமைக்க 10 லட்சம் அமெரிக்க டாலர்களை கும்பகோணத்தைச் சேர்ந்த டாக்டர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தன் ஆகியோர் கொடுத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருஞானசம்பந்தம் கூறியதாவது: அமெரிக்காவில் மட்டும் 2 லட்சம் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தமிழை சரியாக போதிக்க இங்கு சரியான இன்ஸ்டிடியூட் இல்லை. சில தனியார் கல்வி நிறுவனங்கள்தான் இங்கு தமிழ் கற்றுத் தருகின்றன.
இதனால் பலரும் ஒன்று கூடி இந்த இருக்கையை இங்கு அமைக்கவுள்ளோம் என்றார் அவர்.