பைலட்டாக வேண்டுமா.... அழைக்கிறது எச்ஏஎல் நிறுவனம்...!!

Posted By:

டெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்நிறுவனத்தில் (எச்ஏஎல்) டெஸ்ட் பைலட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம். எக்ஸ்பரிமண்டல் டெஸ்ட் பைலட், பிளைட் டெஸ்ட் என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

பைலட்டாக வேண்டுமா.... அழைக்கிறது எச்ஏஎல் நிறுவனம்...!!

எக்ஸ்பரிமண்டல் பிளைட் டெஸ்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கு தகுந்த கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்கவேண்டும். ரோட்டரி விங் ஏர்கிராப்ட்களில் பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும்.

இதேபோல டெஸ்ட் பைலட்டாக ரோட்டரி விங் ஏர்கிராப்ட்டில் பணியாற்றிய அனுபவங்கள் இருக்கவேண்டும். இதற்கான தகுதிச் சான்றிதழ் ஏஎஸ்டிஇ நிறுவனத்திடம் பெற்றிருக்கவேண்டும். வயது 48-க்குள் இருக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.550 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.

ஊதியமாக ரூ.36,600முதல் ரூ.62,00 வரை கிடைக்கும். வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்படுவர். நேர்முகத் தேர்வு அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை மே 11-ம் தேதிக்குள் The Senior Manager (HR), Hindustan Aeronautics Limited Corporate Office, 15/1 Cubbon Road, Bangalore - 560001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

English summary
Applications are invited by Hindustan Aeronautics Ltd (HAL) for the recruitment for 2 Experimental Test Pilot and Flight Test Engineer Posts. Details of this recruitment is listed below. Name of the Post and Number of Posts: Flight Test Engineer (Rotary Wing) (Grade - VII/ VI): 1 Post. Experimental Test Pilot (Rotary Wing) (Grade VII/VI) : 1 Post. Who is Eligible for the HAL, Bangalore Job? Qualification: Flight Test Engineer: Applicant must be a Qualified Experimental Flight Test Engineer on Rotary Wing Aircraft/Qualified Experimental Flight Test Engineer (Avionics) from ASTE or any recognised foreign School. Experimental Test Pilot: Applicant must be a Qualified Experimental Test Pilot on Rotary Wing Aircraft from ASTE or any recognised foreign School.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia