ஓரே நாளில் 2 தேர்வு குழப்பம்: குரூப்-2 தேர்வை தள்ளிவைத்து டி.என்.பி.எஸ்.சி

சென்னை: குரூப்-2 தேர்வை 2016 ஜனவரி 24-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.

எழுதுபொருள், அச்சகத் துறை, நில அளவை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் 1,863 நேர்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வு டிசம்பர் 27-ல் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. கடந்த 12-ம் தேதி அறிவிப்பு செய்தது.

ஓரே நாளில் 2 தேர்வு குழப்பம்: குரூப்-2 தேர்வை தள்ளிவைத்து டி.என்.பி.எஸ்.சி

 

இந்த நிலையில், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான "நெட்' தேர்வும் டிசம்பர் 27-ஆம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஒரே நாளில் இரு தேர்வுகள் நடைபெறுவது குறித்து, பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, தேர்வு தேதியை மாற்றி டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப்-2 தேர்வு அறிவிப்பு கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதில், 84 கூடுதல் பதவிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான தேதி மாற்றப்பட்டு, 2016 ஜனவரி 24-ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெறும்.

இதுதொடர்பான சந்தேகங்களுக்கு contacttnpssc@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ மாணவ, மாணவிகள் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu Public services Commission (TNPSC) has postponed Group-2 exams to Next year. For ore details aspirants can contact through in the following email address, contacttnpsscgmail.com
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X