ஜீனியஸ் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிங்க மாணவர்களே

Posted By:

குழந்தைகள் தினம் வரும் வேலையில் ஆஃபர்களும் அதிகரித்து வருகின்றது என்பது உண்மையோ என்று சிந்திக்க தோன்றுகிறது ஏனெனில் குழந்தைகள் தின விழாவில் குழந்தைகளுக்கு சில பரிசு பொருட்கள் வழங்குவதுண்டு

குழந்தைகளே உங்களுக்கு தமிழ் கேரியர் இந்தியா உங்கள் திறனை அங்கிகரிக்கும் பரிசு பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பை அறிமுகப்படுத்துகிறோம் .

ஜீனியஸ் ஸ்காலர்ஷிப் பெற மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்

பெற்றோர்களே குழந்தைகள் தின விழா தொடங்கவுள்ளது உங்கள் பட்டுக்குட்டிக்கு நீங்கள் தினம்தினம் கொண்டாட்ட அனுபவங்களை தரும் பெற்றோர்களாகத்தான் இருப்பீர்கள் அத்துடன் புது அறிவிப்பு ஒன்று நாங்கள் தெரிவிக்கின்றோம் . உங்கள் குழந்தை திறன் படைத்தவர்களா சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறார்களா அப்படியெனில் நீங்கள் நிச்சயமாக எங்கள் தகவல்களை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளுக்கு தேவையான தளத்தை உருவாக்கி கொடுங்கள் இது ஒரு அருமையான வாய்ப்பாகும் .

ஜீனியஸ்:

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் மாணவ குழந்தைகளின் திறனை அங்கிகரிக்க ஒரு லட்சம் வரை உதவித்தொகை வழங்குகிறது . மேக்ஸ் இன்சூரன்ஸ் தனது இக்னேஷியஸ் திட்டத்தில் திறன் மற்றும் புதுமையாக்கம் கொண்ட்ட மாணவர்களை ஊக்குவிக்க ஜீனியஸ் என்ற திட்டத்தினை கொண்டு மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆக்கத் திறன் கொண்ட மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு ஜீனியஸ் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வரை கல்விஉதவித் தொகை பெற வாய்ப்பளிக்கின்றது . ஜீனியஸ்  இணைய இணைப்ப தேவையான தகவல்களை வழங்கும். 

இந்த புதிய அறிவிப்பானது மாணவர்களுக்கு ஒரு அரியவாய்ப்பாகும் திறன்களை சரியாக கண்டுபிடித்து மாணவர்களை சாதனை புரிய வைக்க உதவுகின்றது . ஓடி விளையாடும் எண்ணங்களை கொண்ட பாப்பாகளுக்குள் ஒளிந்திருக்கும் திறன்களை வெளிப்படுத்தி வருங்காலத்தை வளமாக்க ஒரு அருமையான வாய்ப்பாகும் .

பள்ளி ஆசிரியர்களே நீங்களும் உங்கள் மாணவர்களு இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்த உதவுங்கள் உங்கள் மாணவர்களின் படைப்பாற்றல் ஜீனியஸ் தன்மை உங்களுக்கும் பெருமை சேர்க்கும் .

இத்திறனை அங்கிகரியுங்கள் வெற்றி பெறட்டும் உங்கள் சுட்டி குழந்தைகளுக்குள் இருக்கும் ஜீனியஸ் திறனை வெளிப்படுத்துங்கள் வாழ்த்துக்கள்

சார்ந்த பதிவுகள்:

சித்திரகலா ஓவியப்போட்டி பங்கேற்க ஓடி வாங்க குழந்தைகளே !! 

English summary
here article tell about Genius scholarship for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia