ஒரு பெண் அம்பு விடுவதை போன்ற ஓவியம் உள்ள குகை எதுன்னு தெரியுமா? பொது அறிவுக் கேள்விகள்

டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுஅறிவு வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்

1. பழைய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள இடம்

அ. தான்றிகுடி ஆ. பல்லாவரம் இ. புதுக்கோட்டை ஈ. கொடைக்கானல் மலை

(விடை : பல்லாவரம்)

2. ஒரு பெண் அம்பு விடுவதை போன்ற ஓவியம் உள்ள குகை

அ. ரேணி குண்டா ஆ. அத்திரம்பாக்கம் இ. மஹேஸ்வரா ஈ. பிம்பேட்கா

(விடை : பிம்பேட்கா)

 ஒரு பெண் அம்பு விடுவதை போன்ற ஓவியம் உள்ள குகை எதுன்னு தெரியுமா? பொது அறிவுக் கேள்விகள்

3. தமிழ்நாட்டின் வரலாற்றுக் காலம் தொடங்கும் காலம்

அ. ஹரப்பா காலம் ஆ. லெமூரியா காலம் இ. சங்க காலம் ஈ. குமரிக் கலம்

(விடை : சங்க காலம்)

4. குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்தது?

அ. பூகம்பம் ஆ. படையெடுப்பு இ. வறட்சி ஈ. கடற்கோள்

(விடை : கடற்கோள்)

5. ஜாவகம் கடாரம் முதலான கீழ்திசை நாடுகளை வென்றவர்?

அ. ராஜராஜன் ஆ. ராஜேந்திரன் இ. கரிகாலன் ஈ. சேரன் செங்குட்டுவன்

(விடை : ராஜேந்திரன்)

6. சிந்துசமவெளி மக்களின் சிற்ப வேலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு

அ. எழுத்து முறை ஆ. டெரகோட்டா இ. ஆயுதங்கள் ஈ. சுண்ணாம்புக்கல் சிலை

(விடை : சுண்ணாம்புக்கல் சிலை)

7. ரிக் வேதகாலத்தில் ஆரியர்கள் வாழ்ந்த பகுதி

அ. கங்கைச் சமவெளி ஆ. மகதம் இ. சிந்து ஈ. குஜராத்

(விடை : சிந்து)

8. பிற்பட்ட வேதகாலத்தில் முக்கிய அரசாட்சி பகுதி

அ. சிந்து பகுதி ஆ. பஞ்சாப் இ. கங்கைச் சமவெளி ஈ. சப்த சிந்து

(விடை : கங்கைச் சமவெளி)

9. ஜீனர் என்றால் பொருள்

அ. அறிந்தவர் ஆ. ஞானி இ. வெற்றியாளர் ஈ. முக்தி பெற்றவர்

(விடை : வெற்றியாளர்)

10. மௌரிய வம்சத்தின் கடைசி அரசன்

அ. குணாளன் ஆ. திணா இ. மகேந்திரன் ஈ. பிருகத்திரதன்

(விடை : பிருகத்திரதன்)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above mentioned G.K. Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X