சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. மாறாத வெப்பநிலையில் வாயுவின் கன அளவும் அழுத்தமும் எதிர்விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளது. இது எந்த விதியைக் குறிக்கிறது.
அ. ஜீல் விதி ஆ. பாஸ்கல் விதி இ. சார்லஸ் விதி ஈ. பாயில் விதி
(விடை : பாயில் விதி)
2. சிவப்பு நிறமுடைய கோள் எது?
அ. சனி ஆ. செவ்வாய் இ. பூமி ஈ. புதன்
(விடை : செவ்வாய்)
3. வெள்ளிக்கோள் சூரியனை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம்
அ. 200 நாட்கள் ஆ. 195 நாட்கள் இ. 220 நாட்கள் ஈ. 225 நாட்கள்
(விடை : 225 நாட்கள்)
4. ஐந்து லிட்டர் பாதரசத்தின் எடை (கிலோ கிராமில்)
அ. 680 ஆ. 70 இ. 35 ஈ. 68
(விடை : 68)
5. சூரிய குடும்பத்தில் வெளிப்புறத்திலிருந்து அண்டவெளியில் உருவாகும் கதிர்கள்
அ. காஸ்மிக் கதிர்கள் ஆ. ஆல்பா கதிர்கள் இ. பீட்டா கதிர்கள் ஈ. காமா கதிர்கள்
(விடை : காஸ்மிக் கதிர்கள்)
6. சனிக்கோளுக்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளன?
அ. 60 ஆ. 35 இ. 60 ஈ. 50
(விடை : 60)
7. காற்று மண்டலத்தில் எந்த அளவு நைட்ரஜன் வாயு காணப்படுகிறது?
அ. 98% ஆ. 68% இ. 78% ஈ. 58%
(விடை : 78%)
8. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்மணி
அ. லியு யாங் ஆ. கல்பனா சாவ்லா இ. ராகேஷ் சர்மா ஈ. சுனிதா வில்லியம்ஸ்
(விடை : கல்பனா சாவ்லா)
9. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
அ. புதன் ஆ. சனி இ. யுரேனஸ் ஈ. வெள்ளி
(விடை : புதன்)
10. தற்போதைய வானியல் ஆய்வுகளின்படி அண்டத்தின் வயது
அ. 15.56 பில்லியன் ஆண்டுகள் ஆ. 13.73 பில்லியன் ஆண்டுகள் இ. 12.0 பில்லியன் ஆண்டுகள் ஈ. 16.65 பில்லியன் ஆண்டுகள்
(விடை : 13.73 பில்லியன் ஆண்டுகள்)


Click it and Unblock the Notifications












