சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும்.
போட்டி தேர்வுகளுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் ஒன் இந்தியா வாசகர்களுக்காக தினசரியும் பொது அறிவு கேள்வி பகுதிகள் வெளியாகிறது. தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ்நாட்டில் அணுஆற்றல் உலைகள் அமைந்துள்ள இடம் எது?
அ. தூத்துக்குடி ஆ. கல்பாக்கம் இ. கூடலூர் ஈ. தஞ்சாவூர்
(விடை : கல்பாக்கம்)
2. காந்தத்தால் கவரப்படும் பொருள் எது?
அ. தாமிரம் ஆ. எப்சம் இ. இரும்பு ஈ. பித்தளை
(விடை : இரும்பு)
3. கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் யார்?
அ. ஐன்ஸ்டீன் ஆ. மேரி கியூரி இ. ஹென்றி பெக்கூரல் ஈ. ரான்ட்ஜன்
(விடை : ஹென்றி பெக்கூரல்)
4. வெற்றிடத்தில் ஊடே செல்ல இயலாதது எது?
அ. காந்தபுலம் ஆ. மின்புலம் இ. ஒலி ஈ. ஒளி
(விடை : ஒலி)
5. கோள்களுக்கு இடையே உள்ள கவர்ச்சி விசையை சரியாகக் கூறிய விஞ்ஞானி யார்?
அ. கெப்ளர் ஆ. நியூட்டன் இ. கலீலியோ ஈ. டாலமி
(விடை : கெப்ளர்)
6. இந்திய அணுசக்தி துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ. ஹோமி ஜஹாங்கீர் பாபா ஆ. சர்.சி.வி இராமன் இ. சீனிவாச இராமானுஜம் ஈ. ஜெகதீஷ் சந்திர போஸ்
(விடை : ஹோமி ஜஹாங்கீர் பாபா)
7. எக்ஸ் கதிர்களால் ஊடுருவ முடியாத பொருள்
அ. இரும்பு ஆ. எலும்பு இ. கண்ணாடி ஈ. மரம்
(விடை : எலும்பு)
8. மின்சாரத்தை எளிதில் கடத்தாத உலோகம் எது?
அ. இரும்பு ஆ. வெள்ளி இ. பிஸ்மத் ஈ. செம்பு
(விடை : பிஸ்மத்)
9. திறனின் அலகு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ. ஆற்றல் ஆ. விசை இ. லிட்டர் ஈ. வாட்
(விடை : வாட்)
10. ஆற்றல் அழிவின்மை விதியைக் கூறியவர் யார்?
அ. பிராண்ட் ஆ. டால்டன் இ. ராபர்ட் மேயர் ஈ. ஐன்ஸ்டீன்
(விடை :ராபர்ட் மேயர்)