சென்னை: பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. எதன் மூலம் வானவில் தோன்றுகிறது?
அ. ஒளிவிலகல் ஆ. ஒளி எதிரொலித்தல் இ. ஒளிப்பிரிகை ஈ. இவற்றுள் ஏதுமில்லை
(விடை : ஒளிப்பிரிகை)
2. வெப்பமானிகளில் பெரிதும் பயன்படும் திரவம்?
அ. பாதரசம் ஆ. மண்ணெண்ணெய் இ. பெட்ரோல் ஈ. ஈதர்
(விடை : பாதரசம்)
3. ஏவுகணை செயல்படுவதின் தத்துவம் யாது?
.அ. கோண உந்த மாறாக் கோட்பாடு ஆ. நிறை மாறாக் கோட்பாடு இ. ஆற்றல் மாறாக் கோட்பாடு ஈ. உந்த மாறாக் கோட்பாடு
(விடை : ஆற்றல் மாறாக் கோட்பாடு)
4. மின்தடையை அளக்கும் கருவி?
அ. ஹைட்ரோ மீட்டர் ஆ. தெர்மோ மீட்டர் இ. ஹைக்ரோமீட்டர் ஈ. ஓம் மீட்டர்
(விடை : ஓம் மீட்டர்)
5. சர்வேத அணுசக்தி கழகத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
அ. ஜெனிவா ஆ. வியன்னா இ. லண்டன் ஈ. லெபனான்
(விடை : வியன்னா)
6. நீரில் அமிழ்ந்துள்ள குச்சி வளைந்திருப்பது போலக் காணப்படக் காரணம்?
அ. ஒளிவிலகல் ஆ. ஒளிச்சிதறல் இ. நீரின் அழுத்தம் ஈ. மாயபிம்பம்
(விடை : ஒளிவிலகல்)
7. ரேடியோ தெரபி எந்த சிகிச்சைக்கு பயன்படுகிறது?
அ. மலேரியா ஆ. தலைவலி இ. யானைக்கால் ஈ. தைராய்டு சுரப்பி புற்று நோய்
(விடை : தைராய்டு சுரப்பி புற்று நோய்)
8. அணுகுண்டினை கண்டுபிடித்தவர் யார்?
அ. டால்டன் ஆ. ஐன்ஸ்டின் இ. ஆட்டோஹான் ஈ. ரூதர்போர்டு
(விடை : ஆட்டோஹான்)
9. பாறைகளின் வயதை நிர்ணயிக்க உதவுவது?
அ. ரேடியோ கார்பன் ஆ. ரேடியோ அயோடின் இ. ரேடியோ கோபால்ட் ஈ. ரேடியோ பாஸ்பரஸ்
(விடை : ரேடியோ கார்பன்)
10. காந்தத்தால் கவரப்படாதது
அ. இரும்பு ஆ. நிக்கல் இ. கோபால்ட் ஈ. தாமிரம்
(விடை :தாமிரம்)