டெல்லி: டெல்லியிலுள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவன ஹால்டலுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி திடீர் வருகை புரிந்தார்.
டெல்லி ஐஐடி வளாகத்திலுள்ள ஹாஸ்டல், பயிற்சி அலுவலக வளாகத்துக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருது இரானி வந்தார். அங்கு மாணவர்களுக்கு செய்து தரப்பட்டு வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

தற்போது டெல்லியில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை அமைச்சர் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு ஏர்-கூலர் வசதிகளை அனுமதித்திருப்பதாக அமைச்சரிடம் ஐஐடி வளாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் சில இடங்களில் மாணவர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படாததை அமைச்சர் அறிந்தார்.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களுக்கு குளிர்ச்சியான குடிநீர் வசதி உள்ளிட்டவற்றைத் தருமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications

