சென்னை : மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று ஜூன் 27ந் தேதி ஆரம்பமானது. மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் படிப்பில் சேர சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு விபரங்கள்
1. ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி - கடந்த ஆண்டு கட்டணம் ரூ. 2.80 லட்சம் - இந்த ஆண்டு கட்டணம் ரூ. 2.85 லட்சம்
2. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, கோவை - கடந்த ஆண்டு கட்டணம் ரூ. 3 லட்சம் - இந்த ஆண்டு கட்டணம் ரூ. 4 லட்சம்
3. கற்பக வினாயகா மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம் - கடந்த ஆண்டு கட்டணம் ரூ. 3 லட்சம் - இந்த ஆண்டு கட்டணம் ரூ. 3.85 லட்சம்
4. வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, மதுரை - கடந்த ஆண்டு கட்டணம் ரூ. 2.50 லட்சம் - இந்த ஆண்டு கட்டணம் ரூ. 3.90 லட்சம்
5. தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை - கடந்த ஆண்டு கட்டணம் ரூ. 3 லட்சம் - இந்த ஆண்டு கட்டணம் ரூ. 3.85 லட்சம்
6. ஸ்ரீமூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி - கடந்த ஆண்டு கட்டணம் ரூ. 3 லட்சம் - இந்த ஆண்டு கட்டணம் ரூ. 3.90 லட்சம்
7. தனலட்சுமி சீனிவாசன், மருத்துவக் கல்லூரி - கடந்த ஆண்டு கட்டணம் ரூ. 3 லட்சம் - இந்த ஆண்டு கட்டணம் ரூ. 4 லட்சம்
8. சென்னை மருத்துவக் கல்லூரி (எஸ்.ஆர்.எம்) திருச்சி - கடந்த ஆண்டு கட்டணம் ரூ. 3 லட்சம் - இந்த ஆண்டு கட்டணம் ரூ. 3.85 லட்சம்
9. அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி, சேலம் - கடந்த ஆண்டு கட்டணம் ரூ. 3 லட்சம் - இந்த ஆண்டு கட்டணம் ரூ. 3.85 லட்சம்
அனைத்து சுயநிதி மருத்துவக்கல்லூரிகளிலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களக்கு ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து சுயநித பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த வருடம் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம், இந்த வருடம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் அனைத்து சுயநிதி பல்மருத்துவக் கல்லூரிகளிலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 6 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












