டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளில் சேர ஆசையா....!!

டெல்லி: டாக்டர் டி.ஒய். பாட்டீல் வித்யாபீட இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோடெக்னாலஜி அண்ட் பயோஇன்பர்மேட்டிக்ஸ் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இந்த இன்ஸ்டிடியூட் ஆமைந்துள்ளது.

பி.டெக் பயோடெக்னாலஜி, பி.டெக் மெடிக்கல் பயோடெக்னாலஜி, எம்.டெக் ஒருங்கிணைந்த பயோடெக்னாலஜி, எம்.எஸ்சி பயோடெக்னாலஜி, எம்.எஸ்சி பயோஇன்பர்மேட்டிக்ஸ் போன்ற படிப்புகளை இன்த இன்ஸ்டிடியூட் வழங்குகிறது. பட்டப்படிப்பில் சேர பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பிளஸ்-2வில் இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற பாடங்களை எடுத்துப் படித்திருக்கவேண்டும்.

டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளில் சேர ஆசையா....!!

பட்டமேற்படிப்பில் சேர பட்டப்படிப்பில் இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், லைப் சயின்ஸஸ், பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, ஹியூமன் பயாலஜி, பார்மகாலஜி போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். பல்கலைக்கழக அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விரும்புபவர்கள் ரூ.600-க்கு "Registrar, Dr. D.Y.Patil Vidyapeeth," என்ற பெயரில் டிடி எடுத்து புனேவுக்கு அனுப்பினால் விண்ணப்பங்கள் அனுப்பப்படும்.

மேலும் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை அனுப்பும்போது விண்ணப்பத்துக்கான தொகையை அனுப்பினால் போதும். நுழைவுத் தேர்வு மூலம் மாணவ, மாணவியர் இங்கு சேர்த்துக்கொள்ளப்படுவர். மேலும் விவரங்களுக்கு http://biotech.dpu.edu.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பங்கள் ஜூன் 15-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். ஜூன் 26-ல் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Dr.D.Y.Patil Vidyapeeth Institute of Biotechnology & Bioinformatics has invited applications for admissions into various undergraduate, and postgraduate programmes in its various constituent colleges. Programmes offered are: UG programmes: B.Tech Biotechnology B.Tech Medical Biotechnology PG programmes: M.Tech Integrated Biotechnology M.Sc Biotechnology M.Sc Bioinformatics Interested candidates can read through for more information on eligibility criteria, application procedure, and important dates for admissions into Dr.D.Y.Patil Vidyapeeth Institute of Biotechnology & Bioinformatics.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X