வண்ணம் பொங்கும் தீபாவளி திருநாளில் புத்தாடை எடுத்து இனிப்புகள் பகிர்ந்து கொண்டாடுவார்கள் அனைவரும். அதே நேரத்தில் அலுவலகம் செல்வோர்களுக்கு இந்த கொண்டாட்டத்துக்கு பின் இருக்கும் செலவுகளை குறித்து கவனமும் பயமும் இருக்கும். அவர்களை சற்று நிம்மதியாக இருக்கவைப்பது போனஸ்தான். உங்கள் அலுவலகத்தில் போனஸ் தந்துவிட்டார்களா?. இல்லையென்றால் நீங்கள் உங்கள் வழக்கறிஞரை அழையுங்கள். ஆம்.. நீங்கள் வழக்கு தொடரலாம்.

போனஸ் சட்டத்தின்படி, உங்கள் வருட வருமானத்திலிருந்து 8.33% லிருந்து 20% வரை போனஸ் தரவேண்டும்.
5 வருடங்களுக்கு மேல் செயல்படும் நிறுவனங்களுக்கு இது பொருந்தும். அவர்கள் குறைந்த பட்சம் 21 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் தருபவர்களுக்கு அதிகபட்சமாக 20 சதவிகிதம் போனஸ் தரவேண்டும்.
20 நபர்களுக்கு மேல் பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் கட்டாயம் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மருத்துவமனை, பள்ளிகள், வர்த்தககூடங்கள் என எந்த நிறுவனமாக இருந்தாலும் இதை பின்பற்ற வேண்டும்.


Click it and Unblock the Notifications












