தேனா பாங்க்கில் வேலை.. 300 காலியிடம்.. நல்ல சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

By Staff

சென்னை : தேனா பாங்க் புரபேசனரி ஆபிஸர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேனா பாங்க்கில் வேலை.. 300 காலியிடம்.. நல்ல சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

 

வேலை - தேனா பாங்க் புரபேசனரி ஆபிஸர்

கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

மொத்த காலியிடங்கள் - 300

ஊதியம் - ரூ. 23.700/- முதல் ரூ. 42020/- வரை/ மாதம்

வேலையிடம் - இந்தியா முழுவதும்

விரிவான தகுதிகள்

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும். பொது பிரிவைச் சார்ந்தவர்கள் 60% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

20 வயது முதல் 29 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

(01/04/1988ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களும், 01/04/1998ம் தேதிக்கு முன் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்)

முன்பதிவு செய்யப்படாத 206 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 22 காலியிடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 62 காலியிடங்களும் எஸ்டி பிரிவினருக்கு 10 காலியிடங்களும் மொத்தம் 300 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

எழுத்துத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். அதில் ரிசனிங், குவாண்டிட்டி அப்டிடியூடு, ஜெனரல் அவர்னெஸ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். பின் 30 நிமிடத்திற்கு டிஸ்கிரிப்ட்டிவ் பேப்பர் தேர்வு நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் குரூப் டிஸ்கசன் மற்றும் நேர்க்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 

பொதுப் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு ரூ. 400/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 9 மே 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு ஐபிபிஎஸ் வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தை அனுகவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Dena Bank Recruitment 2017 for PO Probationary Officers through Post Graduate Diploma in Banking & Finance (PGD-B&F) Course. The Dena Bank PO Recruitment selection process based on online exam followed by Group Discussions and Interviews.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X