புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்ட மேற்படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2016-ம் கல்வியாண்டில் இந்தப் படிப்புகள் தொடங்கும் பிஸினஸ் எகனாமிக்ஸ் பிரிவில் பிஎச்.டி. படிப்புகள் படிக்கலாம்.

இந்தப் படிப்பு பயில விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு படித்து முடித்திருக்கவேண்டும். விண்ணப்பத்தை the Faculty of Applied Social Sciences and Humanities, Department of Business Economics, Room No. 229, Arts Faculty Building, University of Delhi South Campus, Benito Juarez Marg, Dhaula Kuan, New Delhi-110021 என்ற முகவரியில் வாங்கிக் கொள்ளலாம்.
கல்வித் தகுதி, எவ்வாறு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும், தேர்வு முடிவு, தேதிகள் போன்ற விவரங்களை டெல்லி பல்கலைக்கழகத்தின் இணையதளமான http://www.du.ac.in -ல் பெறலாம்.
விண்ணப்பங்களை ஏப்ரல் 18-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறும்.


Click it and Unblock the Notifications
