டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..!

Posted By:

டெல்லி ; தற்போது இந்த பல்கலைக்கழகத்தின் அங்கமாக செயல்படும் பல்வேறு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தைத்ரேயி கல்லூரியில் 67 பணியிடங்களும், அரபிந்தோ கல்லூரியில் 67 பணியிடங்களும், பாஸ்கராச்சாரியா கல்லூரியில் 31 பணியிடங்களும், லட்சுமிபாய் கல்லூரியில் 65 இடங்களும், டெல்லி கலை அறிவியல் கல்லூரியில் 39 பணியிடங்களும் உள்ளன.

மைத்ரேயி கல்லூரி

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மைத்ரேயி கல்லூரி ஏ-கிரேடு அந்தஸ்து பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். தற்போது இந்த கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தாவரவியல், வேதியில், வணிகவியல், கணினி அறிவியல், வேதியியல், வணிகவியல், பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி, வரலறு, கணிதம், இயற்பியல், அரசியல் அறிவியல், பஞ்சாபி, சமஸ்கிருதம், சமூகவியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. இட ஒதுக்கீடு வாரியான மற்றும் பாடப்பிரிவு வாரியான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் www.maitreyi.ac.in என்ற இணையதளத்தில் முழுமையான விரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 17.06.2017ந் தேதியாகும்.

டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..!

அரபிந்தோ கல்லூரி

மற்றொரு டெல்லி பல்கலைக்கழக கல்லூரியான அரபிந்தோ கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 14 பாடப் பிரிவுகளில் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் விருப்பம் உள்ளவர்கள் www.aurobindo.du.ac.in என்ற இணையதள பக்கத்தில் விரிவான விரங்களைப் பார்க்கலாம். அறிவிப்பில் இருந்து 2 வாரங்களுக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19-06-2017ந் தேதியாகும்.

பாஸ்கராச்சாரியா கல்லூரி

டெல்லி பாஸ்கராச்சாரியா கல்லூரிகளில் 31 பேர் உதவி போராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். பயோமெடிக்கல், ஆங்கிலம், புட் டெக்னாலஜி, பிசிக்ஸ், பாலிமர் சயின்ஸ போன்ற பிரிவில் பணிகள் உள்ளன. விண்ணப்பிப்பதற்கான தகுதி விபரங்களை www.bcas.du.an.in என்ற இணையதள முகவரியில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

லட்சுமிபாய் கல்லூரி

டெல்லி அசோக் விகார் பகுதியில் செயல்படும் லட்சுமிபாய் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு 65 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வணிகவியல், பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி, வரலாறு, ஹோம் சயின்ஸ், பிலாசபி, பொலிடிகல் சயின்ஸ், சமஸ்கிருதம், சமூகவியல், இ.வி.எஸ். போன்ற பிரிவில் பணிகள் உள்ளன. '

விருப்பம் உள்ளவர்கள் இது பற்றிய விரிவான விபரங்களை lakshmibaicollege.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 18.06.2017ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

கலை அறிவியல் கல்லூரி

டெல்லி நேதாஜி நகரில் செயல்படும் டெல்லி கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு 39 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வணிகவியல், கணினி அறிவியல், பொருளாதாரம், ஆங்கிலம், இதழியல், இந்தி, கணிதவியல், அரசியல் அறிவியல் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன. இது பற்றிய விரிவான விபரங்களை http://dcac.du.ac.in என்ற இயைதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.06.2017ந் தேதியாகும். இது பற்றிய அறிவிப்புகள் ஜூன் 3ந் தேதி மற்றும் 9ந் தேதி எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English summary
Delhi University, New Delhi has published notification for the recruitment of Assistant Professor vacancies in various subjects.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia