சென்னை: ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற கலாசாரத் திருவிழாவில் ஜாம்ஷெட்பூர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(என்ஐடி) முதல் பரிசைப் பெற்றது.
ஜாம்ஷெட்பூரில் உள்ள என்ஐடி-யில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாசாரத் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஜாம்ஷெட்பூர் என்ஐடிக்கு முதல் பரிசு கிடைத்தது. இதில் 2-வது இடத்தை புவனேஸ்வர் கேஐஐடி பல்கலைக்கழகம் பிடித்தது.

ஏராளமான பல்கலைக்கழகங்கள், என்ஐடி கல்வி நிறுவனங்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்றன. இசை, நாடகம், நடனம் என பல்வேறு போட்டிகள் இந்த திருவிழாவில் நடைபெற்றன. இறுதியாக பிகார், பெங்கால், ஓடிஸா, ஜார்க்கண்ட் மாநில மாணவர்களின் பாங்க்ரா நடனத்துடன் விழா இனிதே முடிந்தது.
இதுகுறித்து என்ஐடி பேராசிரியர் ராம்பாபு கோடலி கூறியதாவது: ஏராளமான கல்லூரிகள் இந்த விழாவில் பங்கேற்று திருவிழாவை வெற்றிகரமாக நடத்திக் காட்டின. இது ஒரு கூட்டுமுயற்சி. பங்கேற்ற அனைவருக்கும் நான் என் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
பல கல்லூரிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் இதில் பங்கேற்றனர். மொத்தம் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.


Click it and Unblock the Notifications

