சென்னை: பெங்களூரு நகரிலுள்ள சென்டிரல் பவர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் உதவி கிரேட் 3 பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

என்ஜினீயரிங் ஆபீஸர், என்ஜினீயரிங் அசிஸ்டண்ட், டெக்னீஷியன், லைப்பரியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பவேண்டும். பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
என்ஜினீயரிங் ஆபீஸர் கிரேட் 1, 2 பணியிடளுக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படும். அசிஸ்டண்ட் லைப்பரியன், அசிஸ்டண்ட் கிரேட் 2, 3 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களுக்கு ரூ.500 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு இந்தக் கட்டணம் கிடையாது.
கூடுதல் விவரங்களுக்கு www.cpri.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
சிபிஆர்ஐ இன்ஸ்டிடியூட்டானது மத்தியின் அரசசால் 19670-ல் நிறுவப்பட்டதாகும். பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. 1978-ல் இதற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. தற்போது மத்திய மின்துறையின் கீழ் இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications
