அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் மாணவி ஸ்ருதி பழனியப்பன் தேர்வாகியுள்ளார்.

அமெரிக்காவின் காம்பிரிட்ஜ் நகரில் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. உலகில் எல்லோருமே இங்கு படிப்பதை பெருமைக்குரிய ஒரு விஷயமாகவே கருதி வருகிறார்கள்.
இதனிடையே, இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் அமைப்பின் தலைவர் பதவிக்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது.
இதில், பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் நம் தமிழகத்துப் பெண் ஸ்ருதி போட்டியிட்டு 41.5 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவருடன் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஜூலியா ஹியூசா என்ற மாணவியும் வெற்றி பெற்றுள்ளார்.
வீடு போல மாற்றுவோம்
தேர்தலுக்கு முன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மாணவி ஸ்ருதி, பல்கலைக் கழகத்தை சொந்த வீடு போல் மாற்றுவோம் என்று சொன்னார். ஸ்ருதியின் இந்த வார்த்தை நிறையப் பேருக்கு பிடித்துவிட்டது. அதனாலேயே பெரும்பாலானோர் ஸ்ருதிக்கு வாக்களித்துள்ளனர்.
சென்னை பெண் ஸ்ருதி
ஸ்ருதியின் பெற்றோர் கடந்த 1992-ம் ஆண்டே சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறி விட்டனர். தமிழ் மாணவியான ஸ்ருதி இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications












